சேலம் வாழப்பாடியில் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முடிந்தும் பயன்பாட்டிற்கு திறக்கப்படாத அவலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வணக்கம் நேயர்களே... இது மக்களோடு ஜெயா ப்ளஸ்...

விளம்பர திமுக ஆட்சியில் நாள்தோறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், இன்னல்களை அலசுவதுடன், தீர்வை நோக்கிய முயற்சியாகவும் களமிறங்கியுள்ளோம் நாங்கள்...

தற்போது சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்படாதால் பல்வேறு தரப்பினர் சந்திக்கும் அவலங்களை விரிவாக அலச உள்ளோம்.. இதற்காக களத்திலிருந்து இணைகிறார் நமது செய்தியாளர் விஜய் ஆனந்த்... முன்னதாக இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பு....

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 8 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு, 3 மாதங்களுக்கு மேலாகியும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்வேறு தரப்பினரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் புதிய பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Night
Day