சேலம்-விருதாச்சலம் அகல ரயில் பாதையில் மேம்பாலம் அமைத்து தரக்‍கோரி உண்ணாவிரதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலை முருகன் கோவில் அருகில் சேலம் விருத்தாச்சலம் அகல ரயில் பாதையில் ரயில்வே கேட்டை 
அகற்றி சுரங்கப்பாதை அமைப்பதற்கு பதிலாக மேம்பாலமாக அமைத்துக் கொடுக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ஆத்தூரில் ஏழு கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து காட்டுக்கோட்டை முதல் வடசென்னிமலை வரை வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணியை கைவிடாவிட்டால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

varient
Night
Day