சேலம் : விளம்பர திமுக அரசைக் கண்டித்து அரசு ஊழியர்கள் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கோட்டை மைதானத்தில் திரண்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பட்ஜெட் கூட்டத் தொடரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

Night
Day