சேலம்: உலக குளுக்கோமா வாரத்தையொட்டி கண் நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உலக குளுக்கோமா வாரத்தையொட்டி, சேலத்தில் சண்முகா கல்வி குழுமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுடன், மாநகர கூடுதல் துணை காவல் ஆணையர் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். குளுக்கோமா என்பது பார்வை நரம்பை பாதிக்கும் ஒரு கண் நோயாகும். இந்த நோய்க்குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டு தோறும் மார்ச் மாதம் உலக குளுக்கோமா வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள சண்முகா கல்வி குழுமத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுடன், கூடுதல் துணை காவல் ஆணையர் ரவிச்சந்திரன் இணைந்து, வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

Night
Day