சேலம்: குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கும், கிழக்கு மற்றும் மேற்கு கரை வாய்க்கால்களில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு தண்ணீர் திறக்காததால்  சுமார் ஒன்பதாயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர்யின்றி விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டவில்லை கூறப்படுகிறது. இதனால், குள்ளம்பட்டி பகுதியிலுள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்டன கோஷங்களை எழுப்பி  போராட்டம் நடத்தினா்.

Night
Day