தமிழகம்
திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர் - பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா திட்டவட்டம்...
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சாலையின் நடுவில் இருக்கும் மின் கம்பம் சிதிலமடைந்து இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். வாழப்பாடி அருகே பேளூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு மீனவர் தெருவின் நடுவில் உள்ள மின்கம்பம் சிதலமடைந்து உயிர்ப்பலி ஏற்படும் அபாயத்தில் உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி அலுவலகம் மற்றும் மின்சார அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தை அகற்றவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று, இங்குள்ள அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் உள்ள சாக்கடை மற்றும் தெருவின் நடுப்பகுதியில் நிற்கும் மின் கம்பத்தையும் அகற்றி முழுமையான சாலை வசதி ஏற்படுத்தி தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மக்களை அனைத்து வகையிலும் ஏமாற்ற துடிக்கும் திமுக அரசின் ஆயுட்காலம்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...