சேலம்: மது போதையில் சாலையின் நடுவே ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலையின் நடுவே நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இருவழி சாலையாக உள்ள சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனிடையே ராமநாயக்கன்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் மது போதையில் ஒருவர் சாலையின் நடுவே நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக அடாவடியில் ஈடுபட்டார். இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Night
Day