சொர்க்க பூமியாக மாறிய உதகை....

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் உதகையில் தொடர்ந்து நிலவும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த பட்ச வெப்பநிலை 1 புள்ளி 7 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. இதனால், காந்தள், தலைகுந்தா, குதிரை பந்தய மைதானம் போன்ற பகுதிகளில் உறைபனி மற்றும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் தேயிலை தோட்டங்களுக்கு செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

Night
Day