சோதனைகளை முறைபடுத்தாவிட்டால் வரும் 9-ம் தேதி ஆர்ப்பாட்டம் - விக்கிரமராஜா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வணிகர்களை சோதனை என்ற பெயரில் தொந்தரவு செய்வதை முறைபடுத்தாவிட்டால் வரும் 9-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகுவை சந்தித்த விக்கிரமராஜா கோரிக்கை மனு அளித்தார். அதில் வணிகர்கள் 2 ஆயிரம் ரூபாய் கூட எடுத்துச் செல்ல முடியாத நிலை உள்ளதாகவும், 2 லட்ச ரூபாய் வரை எடுத்துச்செல்ல அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தார். மேலும் இதே நிலை நீடித்தால், தேர்தல் முடியும் வரை கடையடைப்பு போராட்டம் நடத்த நேரிடும் எனவும் கூறியுள்ளார்.

Night
Day