ஜனநாயக கட்சி மாநாட்டில் அதிபர் ஜோ பைடனுக்கு ஆரவார வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற ஜனநாயக கட்சி மாநாட்டில் பங்கேற்ற அதிபர் ஜோ பைடனை ஆரவாரமாக வரவேற்ற மக்கள், அவருக்கு பிரியாவிடையும் அளித்தனர். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுவதாக இருந்த ஜோ பைடன், பின்னர் போட்டியிலிருந்து விலகினார். அவருக்குப் பதிலாக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் 81 வயதான பைடன், சிகாகோவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் அவருக்கு ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்து பிரியாவிடை கொடுத்தனர். அதிபர் பைடனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு 4 நிமிடங்கள் நீடித்தது. கலங்கிய கண்களுடன் மக்களின் ஆரவாரத்தை ஏற்றுக் கொண்ட பைடன், பின்னர் மாநாட்டில் உரையாற்றினார்.  

Night
Day