ஜம்புகேஸ்வரர் கோயிலில் தெரு நாய்களை கட்டுப்படுத்த கோரிய மனு - பதில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி திருவானைக்கோவிலில் உள்ள ஜம்புகேஸ்வரர் கோயிலில் தெரு நாய்களை கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரிய மனு மீது மாவட்ட ஆட்சியர், கோயில் இணை ஆணையர் மற்றும் திருச்சி மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள், கோயிலுக்கு வரும் பக்தர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் கோயில் நிர்வாகம் தான் உறுதி செய்ய வேண்டும் என கூறிய நீதிபதி, தெரு நாய்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Night
Day