ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலி - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 26 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 26 பேர் உயிரிழந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் உள்பட 17 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைய வேண்டும் என ஆண்டவனை வேண்டுவதாக சின்னம்மா தெரிவித்துள்ளார்.

இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை சின்னம்மா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் சின்னம்மா தெரிவித்துக்கொண்டுள்ளார்.

varient
Night
Day