ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளை முட்டி காயமடைந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கடந்த 16 ஆம் தேதியன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அப்போது தேனி மாவட்டத்தை சேர்ந்த செல்வமுருகன் என்பவர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்துள்ளார். காளை சேகரிக்கும் பகுதியில் செல்வமுருகன் நின்றிருந்த போது, எதிர்பாராத விதமாக காளை ஒன்று அவரை முட்டி தள்ளியது. இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போட்டியின் போது காளை முட்டியதில் 60 வயதுடைய முதியவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மற்றொருவர் உயிரிழந்துள்ளார். 

Night
Day