ஜாஃபர் சாதிக் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் கோடி ரூபாய் போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர் உட்பட ஐந்து நபர்களை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், டெல்லி கீழமை நீதிமன்றத்தில் ஜாஃபர் சாதிக் மீது போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.  இந்த விவகாரத்தில் தொடர்புடைய திரைப்பட இயக்குனர்கள் மற்றும் திமுக பிரமுகர்கள் உள்ளிட்ட நபர்களிடம் விசாரணை நடைபெறுவதாக போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Night
Day