ஜாகிர் உசேன் படுகொலை வழக்கு - தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லையில்  ஓய்வு எஸ்ஐ ஜாகீர் உசேன் படுகொலை வழக்கில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

நெல்லையில் கடந்த 18ஆம் தேதி ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இதுவரை ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொலைக்கு தொடர்புடையதாக சொல்லப்படும் நூருன்னிஷா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், மதுரையிலிருந்து மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் சார்பில் வழக்கறிஞர்கள் குழுவினர், கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் இல்லத்தில் நேரில் வந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் கண்காணிப்பாக வழக்கறிஞர் எட்கர் கெய்கர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையிடம் பலமுறை புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்க தவறியதால் இந்த கொலை நடந்துள்ளதாக சுட்டிக்காட்டினர். இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு மக்கள் கண்காணிப்பகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. 

Night
Day