ஜாபர்கான்பேட்டையில் புழுதிக்காடாக மாறிய சாலை - வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை, ஜாபர்கான் பேட்டை மெயின் ரோட்டில் தோண்டப்பட்டுள்ள பள்ளத்தினால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர். 

குழாய் பதிப்பிற்காக, அசோக் பில்லரிலிருந்து ஜாபர்கான் பேட்டையிலுள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் வரை தோண்டப்பட்டுள்ள பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமமடைகின்றனர். அதுமட்டுமின்றி, சாலையில் கொட்டப்பட்டுள்ள மண்ணிலிருந்து கிளம்பும் புழுதியால் அப்பகுதி முழுவதுமே புழுதிக்காடாக காட்சியளிக்கின்றது. எனவே, விரைவில் குழாய் பதிக்கும் பணியை முடிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Night
Day