ஜெயா ப்ளஸ் செய்தி எதிரொலி - தாய்-மகனுக்கு வந்தது விடிவுகாலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கன்னியாகுமரி மாவட்டம் மேலச்சங்கரன்குழியில், வாழ இடமின்றி தவித்த தாய்-மகன் குறித்து ஜெயா ப்ளஸ் செய்திகளில் ஒளிபரப்பட்டதன் எதிரொலியாக, பாஜகவினர் அவர்களுக்கு தங்க இடம் வழங்கியுள்ளனர். வள்ளடியான் விளை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராபர்ட் ரசல்ராஜ். இவருடைய தாய் ரஞ்சிதா ராணி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக அவரது வீட்டை விற்று பணத்தை சேகரித்தார். இதனை அறிந்த வட்டி தொழில் செய்து வரும் சகாய அஞ்சலியன் என்பவர், ராபர்ட் ரசல்ராஜை ஏமாற்றி பணத்தை பெற்று சென்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். குடியிருந்த வீட்டை விற்றதால் வாழ இடமின்றி, அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து ஜெயா ப்ளஸ் செய்திகளில் ஒளிபரப்பட்டது. இதனை அறிந்த பாஜகவினர், அதே பகுதியில் உள்ள அம்மா பூங்காவில் இருக்கும் கட்டடத்தில் அவர்களை தற்காலிகமாக குடியமர செய்துள்ளனர்.

Night
Day