ஜெய ப்ளஸ் செய்தி எதிரொலி - பயன்பாட்டிற்கு வந்த புதிய கழிப்பறை கட்டடம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெய ப்ளஸ் செய்தி எதிரொலியாக, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. கொடைக்கானல் நகரின் மையத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பொது கழிப்பிடம் புதிதாக கட்டப்பட்டும் அவை பயன்படாத வகையில் இருந்துள்ளது. பொது கழிப்பறையை உடனடியாக திறக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இதுதொடர்பான செய்தி ஜெயா ப்ளஸ் செய்தியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து கொடைக்கானல் நகராட்சி புதிய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததால், பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Night
Day