ஜே.இ.இ நுழைவுத்தேர்வு - சென்னை நாராயணா ஒலிம்பிக் பள்ளி மாணவன் முதலிடம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜே இ இ பொறியில் படிப்பிற்கான நுழைவு தேர்வில் தங்களுடைய பள்ளி மாணவன் சுனை யாதவ் மாநில அளவில் முதலிடம் பிடித்திருப்பது பெருமை அளிப்பதாக சென்னை நாராயணா ஒலிம்பிக் பள்ளி உதவி பொது மேலாளர் ஷில்பா கூறியுள்ளார்.


சென்னை கோபாலபுரத்தில் உள்ள நாராயணா ஒலிம்பிக் பள்ளியில் 2025ஆம் ஆண்டுக்கான ஜே இ இ பொறியியல் படிப்பிற்கான நுழைவு தேர்வில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களை அப்பள்ளி சார்பாக பாராட்டி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பேட்டியளித்த பள்ளியின் உதவி பொது மேலாளர் ஷில்பா, ஜே இ இ Mains பொறியியல் படிப்புக்கான நுழைவு தேர்வில் இந்திய அளவில் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதில், தங்கள் கல்வி நிறுவனத்தில் இருந்து சுனை யாதவ் என்ற மாணவன் தமிழகத்தில் முதல் இடம் பிடித்துள்ளது தங்களுக்கு பெருமை அளிப்பதாக கூறினார்

Night
Day