எழுத்தின் அளவு: அ+ அ- அ
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஞானசேகரனிடம் ஓ.சி. பிரியாணி வாங்கி சாப்பிட்டு அவரின் தவறான செயல்களுக்கு காவல்துறையே உடந்தையாக இருந்தது சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரியாணி கடை வைத்திருக்கும் ஞானசேகரனிடம், இலவசமாக பிரியாணி மற்றும் மாமுல் வாங்கி அவர் செய்யும் தவறான நடவடிக்கைகளை காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. மேலும் ஞானசேகரனிடம் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கூறப்படும் 6 காவலர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த சிறப்பு
புலனாய்வுக்குழுவினர் அந்த செல்போன்களில் உள்ள தரவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். ஞானசேகரனிடம் நடத்தப்படும் விசாரணையில் நாள்தோறும் புதிய தகவல் கிடைப்பதால், யார் அந்த சார் என்ற மர்மமும் விரைவில் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.