டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து - மத்திய அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டங்ஸ்டன் திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

மதுரை மேலூரை அடுத்த அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 60 நாட்களாக பொதுமக்கள், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மத்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க விவசாயிகள் குழு ஒன்றை தமிழ்நாடு பாஜக டெல்லி அழைத்துச் சென்றது. அப்போது, டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதியளித்துள்ளதாகவும், திட்டம் ரத்து தொடர்பாக  மத்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்து உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டதை பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கியும் அரிட்டாப்பட்டி மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தங்கள் புண்ணிய பூமி காப்பாற்றப்பட்டுள்ளதாக கிராமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். 

Night
Day