எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாடு மாநில முன்னாள் தேர்தல் ஆணையரும், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டாக்டர். கே. மலைச்சாமி, உடல்நலக் குறைவால் காலமானது குறித்து, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்நாடு மாநில முன்னாள் தேர்தல் ஆணையரும், நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான டாக்டர். கே. மலைச்சாமி உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.
திரு.மலைச்சாமி, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர் - நேர்மையாகவும், மிகுந்த ஈடுபாட்டுடனும் திரு. மலைச்சாமி பணியாற்றியதை கண்ட அம்மா அவர்கள், அவரை பல்வேறு பொறுப்புகளில் அமர வைத்து அழகு பார்த்தார் - அதேபோன்று திரு.மலைச்சாமி கழக பணிகளையும் திறம்பட ஆற்றினார் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
அன்பு சகோதரர் திரு.மலைச்சாமியை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.