டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி முறைகேடு..! ஆட்டம் காணும் விளம்பர அரசு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக நடைபெற்ற சோதனையில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், அம்பத்தூரில் உள்ள டாஸ்மாக் குடோன், தியாகராய நகரில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான அக்கார்டு டிஸ்டில்லரீஸ் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 6 ம் தேதி முதல் 3  நாட்கள் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. 

இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்தது, சப்ளை ஆர்டர்கள் பெறுவதற்காக அதிகாரிகளுக்கு மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்தது தொடர்பாக  பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பணியிட  மாற்றம், போக்குவரத்து டெண்டர், பார் உரிம டெண்டர் வழங்கியதில் முறைகேடு மற்றம்  டாஸ்மாக் அதிகாரிகள் உதவியுடன் ஒரு பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக விற்கப்பட்டது தொடர்பான தரவுகள் கிடைத்திருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. 

ஒப்பந்தத்தை பெறுவது தொடர்பாக மதுபான நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இடையே, நேரடி பேச்சுவார்த்தை நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. எஸ்என்ஜே, கால்ஸ், அக்கார்ட், சைய்பில், ஷிவா டிஸ்டில்லரி ஆகிய மதுபான தயாரிப்பு ஆலைகள், தேவி பாட்டில்ஸ், கிறிஸ்டல் பாட்டில்ஸ், ஜிஎல்ஆர் ஹோல்டிங் போன்ற பாட்டிலிங் நிறுவனங்கள் மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டிருப்பது சோதனையில் தெரியவந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், பாட்டில் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து திட்டமிட்டு செலவுகளை உயர்த்தி, போலியான கொள்முதல்களை காட்டி எந்த கணக்கிலும் சேராமல் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், இந்த பணம் டாஸ்மாக்கில் இருந்து கூடுதலாக சப்ளை ஆர்டர்கள் பெற பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை அறிக்கையில் கூறியுள்ளது. 


டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெற்றுள்ள 1000 கோடி ரூபாய் மெகா ஊழலை கண்டித்து வரும் 17ம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகம் அமைந்துள்ள சென்னை தாள​முத்து நடராசன் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்த விவகாரத்தில் தமிழக மக்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை முதலமைச்சருக்கு இருப்பதாக கூறியுள்ளார். 

திமுக​வினர் நடத்தும் சாராய ஆலைகள், பணம் சம்பாதிப்பதற்காக நடத்தப்படுவதாக குற்றம்சாட்டி உள்ள அண்ணாமலை, டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்துள்ள 1000 கோடி ரூபாய் ஊழல், தமிழகத்தையே உலுக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பதவியில் தொடர தார்​மீக உரிமை உள்ளதாக என்பதை முதலமைச்சர் தன்னைத் தானே கேட்டுக்​கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


Night
Day