டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-


ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அருகே டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரி போராட்டம் நடத்திய பெண்களை போலீசார் தரதரவென்று இழுத்து சென்றனர். 

நாடார்வலசை கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து பெண்கள், கடையை முற்றுகையிட்ட போது, போலீசார் கலைந்து போக சொல்லி வற்புறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து போக மறுத்ததால் போலீசார் தரதரவென இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றி கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

Night
Day