டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க உத்தரவு - உயர்நீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வோரை பணியிடை நீக்கம் செய்யும் சுற்றறிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், டாஸ்மாக் நிர்வாகத்தின் விளக்கத்தை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள்ல் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்வது சட்ட விரோதமானது என குறிப்பிட்டுள்ளனர். மேலும், சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, டாஸ்மாக் தரப்பை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்தார். மனுவுக்கு டாஸ்மாக் நிறுவனம் வரும் 27ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். 

Night
Day