டாஸ்மாக் வழக்கு - உயர்நீதிமன்றத்தை இழிவுபடுத்தியதாக தமிழக அரசுக்கு கண்டனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுபடுத்தியதாக தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக்‍ வழக்‍கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று வந்தது. இந்த வழக்‍கை விசாரித்த நீதிபதிகள் டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்றத்தை இழிவுபடுத்தியதாக தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். உச்சநீதிமன்றம் செல்வதாக கூறியிருந்தால் வழக்கை பட்டியலிட்டிருக்கமாட்டோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பொது நலனுக்காக மனுத்தாக்கல் செய்யப்பட்டதா? அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காகவா? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பினர். குறைந்தபட்சம் நீதிமன்றத்திற்காவது நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசுக்‍கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக அரசுக்கு பிற்பகல் 2.15 மணி வரை கெடு விதித்தனர்.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன. 

Night
Day