டாஸ்மாக் வழக்கு - நீதிபதிகள் விலகல்

எழுத்தின் அளவு: அ+ அ-

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ்- என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்பட, 20 இடங்களில் நடத்திய சோதனையில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இதனை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு அறிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று கூறப்படுகிறது.

Night
Day