தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய பட்ஜெட் தாக்கலான நாளில் இருந்து சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ச்சியாக 3 ஆயிரத்து 280 ரூபாய் வரை குறைந்துள்ளதால் நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 23ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அன்றைய தினமே தங்கம் விலை அதிரடியாக 2 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்தது. இதனை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக 3 ஆயிரத்து 160 ரூபாய் குறைந்த நிலையில், இன்றைய தினமும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 51 ஆயிரத்து 320 ரூபாய்க்கும், கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 415 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 89 ரூபாய்க்கும், கிலோ 89 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day