தங்கம் விலை சவரனுக்கு ₹600 உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தினசரி தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஆபரண தங்கம் சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 55 ஆயிரத்து 680 ரூபாய்க்கும், கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து 98 ரூபாய்க்கும், கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து 98 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நகையின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Night
Day