தஞ்சை கோயில் மேற்கூரையை அகற்ற கோரிய வழக்கில் பதில் அளிக்க உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சாவூர் பெரிய கோயில் கர்பகிரஹத்திற்குள், மூலவர் சிலை சிவலிங்கத்திற்கும், கோபுர கலசத்துக்கும் நடுவில்  அமைக்கப்பட்ட மேற்கூரையை அகற்ற உத்தரவிட கோரிய வழக்கில் இந்துசமய அறநிலையத்துறை ஆணையர், தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலய துணை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில், சிமெண்டினால் ஆன மேற்கூரை சமீபத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரண்டுக்கும் இடையே தொடர்பு உள்ளது எனவே மேற்கூரையை இடிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Night
Day