தஞ்சை: விமரிசையாக நடந்த நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணியை தொடங்கினர். தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் சித்திரை முதல் நாளன்று, கிராம பகுதிகளில் விவசாயிகள் நல்லேறு பூட்டி உழவு பணிகளை தொடங்குவது வழக்கம். இதன்படி தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரத்தில் நல்லேறு பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலப்பை, மண்வெட்டி, அரிவாள், டிராக்டர் உள்ளிட்ட உபகரணங்களை சாமி முன்பு வைத்து வழிபாடு செய்த விவசாயிகள், தங்கள் கால்நடைகளை கொண்டு வயல்வெளியில் நல்லேறு பூட்டினர்.

Night
Day