தண்டவாளத்தில் சிமெண்ட் கல் வைத்த நபர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் சிமெண்ட் கல் வைத்த நபர் கைது செய்யப்பட்டார். 

செங்கோட்டை - ஈரோடு பாசஞ்சர் ரயில் இன்று வழக்கம் போல் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், சேரன்மகாதேவி ரயில் நிலையத்திற்குள் ரயில் வந்து கொண்டிருந்த போது தண்டாவளத்தில் சிமெண்ட் கல் இருப்பதை கண்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தாமல் கல்லை நொறுக்கி விட்டு சென்றுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தண்டாவளத்தில் கல்லை வைத்த சேரன்மகாதேவி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். 

Night
Day