தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு எழுத பள்ளிக்கு சென்ற மகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே வடலிவிளை பகுதியில், தந்தை இறந்த சோகத்திலும் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு எழுத சென்ற பள்ளி மாணவியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

திசையன்விளை அருகே வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யாதுரை-பானுமதி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மகள் மதுமிதா இட்டமொழி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை அய்யாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார். தந்தை இறந்த துக்கத்திலும் அவரது உடலை வணங்கி விட்டு, மாணவி மதுமிதா கணித பாட பொதுத்தேர்வு எழுத பள்ளிக்கு சென்றுள்ளார். தந்தை இறந்த சோகத்திலும் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யும் மாணவியை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Night
Day