தந்தை பெரியார் பிறந்தநாள் - புரட்சித்தாய் சின்னம்மா செய்தியாளர் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்திற்கு பெருமளவு வெளிநாட்டு முதலீடுகள் வந்திருப்பதாக விளம்பரம் செய்து, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்காமல், வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக எத்தனை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன? எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்படுகின்றன? எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்? என்பன உள்ளிட்ட விவரங்களை, விளம்பர திமுக அரசு வெளியிட வேண்டும் என, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தியுள்ளார்.

மிலாதுநபி திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும், புரட்சித்தாய் சின்னம்மா தனது நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

தந்தை பெரியாரின் சிந்தனையில் உதித்த பல நல்ல கருத்துகளின் அடிப்படையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி அம்மாவும் உயரிய திட்டங்களை செயல்படுத்தி கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றியதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டார்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை திமுக அரசால் முறையாக செயல்படுத்த முடியாது என்றும், மத்திய அரசின் நிதி உதவி மற்றும் ஒத்துழைப்போடு இத்திட்டத்தை செயல்படுத்த முன்வரவேண்டும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா வலியுறுத்தினார்.

காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி, கார் தொழிற்சாலைகள் உள்ளிட்ட முன்னோடித் திட்டங்கள் வாயிலாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் தமிழகத்தில் தொழில்நிறுவனங்கள் மிகுந்த வளர்ச்சி அடைந்ததாக புரட்சித்தாய் சின்னம்மா புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டினார்.

தமிழக ஆளுநர் மற்றும் தமிழக அரசு மோதல் தொடர்பாக மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுவிட்டதாகவும், திமுகவினர், தங்கள் கட்சிக் கொடி கட்டிய காரில் சென்று, சாலைகள் மற்றும் வயல்வெளிகளில் மேயும் ஆடுகளை திருடிச் செல்வதாகவும் புரட்சித்தாய் சின்னம்மா குற்றம் சாட்டினார்.

2026ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெறும் என்றும், புரட்சித்தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் மீண்டும் மலரும் என்றும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்தார்.

 

Night
Day