தனக்கு எதிராக கூறப்பட்ட சில குற்றச்சாட்டுகளை நீக்கக்கோரி மாணிக்கம் தாக்கூர் மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தனக்கு எதிராக தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாணிக்கம் தாக்கூர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி, அதே தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், வேட்பு மனுவில்உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் செய்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த மனுவில் கூறப்பட்டிருந்த சில குற்றச்சாட்டுக்களை நீக்கக்கோரி மாணிக்கம் தாக்கூர் ல் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Night
Day