தனியார்மயமாகும் போக்குவரத்து துறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசின் புதிய சிற்றுந்து திட்டத்துக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மினி பேருந்து திட்டம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், தற்போது புதிதாக 'புதிய சிற்றுந்து திட்டம் 2024' என்ற திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக இந்த புதிய திட்டத்தை முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த சிற்றுந்து திட்டம் சட்ட விரோதமான திட்டம் என்றும் விமர்சித்துள்ளன.  தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு ஆதரவான  இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், ஒட்டுமொத்த போக்குவரத்து துறையை அழித்துவிடும் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Night
Day