தனியார் தேயிலை தோட்டத்தில் 25 வயது கர்ப்பிணி யானை உயிரிழப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கர்ப்பிணி பெண் யானை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழ் கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட கூட்டாடா அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் யானை ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக வனத்துறையினர் சம்வ இடத்திற்கு சென்று பெண் காட்டு யானை உயிரிழந்ததை உறுதி செய்து கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்தனர். அதில் இறந்தது சுமார் 25 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி பெண் யானை என தெரிய வந்தது. மேலும் மாசடைந்த தண்ணீர் குடித்ததால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு யானை உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்ததை அடுத்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
.

Night
Day