தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம்; மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் மண்டபம் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் மற்றும் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் 4வது நாளாக யாரும் கடலுக்கு செல்லவில்லை. இருப்பினும் ராமேஸ்வரம் பாம்பன் படகு நீர் தளத்தில் தூண்டில் விளைவு இல்லாததால் தங்களது படகுகளை நிறுத்தி வைக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் பாம்பன் லைட் ஹவுஸ் வடக்கு பகுதியில் அதிகமான கடல் சீற்றம் காணப்படுவதால் கரையோரம் இருந்த குடிசை வீடுகள் மற்றும் மீன் கம்பெனிகள் அலைகளில் அடித்து செல்லப்பட்டன. இதனால் மீனவ கிராம மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

Night
Day