தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


திருச்சியில் ஏற்கனவே இரண்டு இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் தற்போது மூன்றாவதாக பெட்ரோல் பங்க ஒன்றிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எடமலைப்பட்டி புதூரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் ஈஸ்வரமூர்த்தி வீடு மற்றும் திருச்சி கேகே நகர் பகுதியில் இன்ஃப்ரா நெட் சென்டர் தனியார் கட்டுமான நிறுவனத்திலும் கடந்த 3 நாட்களாக வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தற்போது ஈஸ்வரமூர்த்தியின் உறவினர் ஒருவரின் பெட்ரோல் பங்கிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Night
Day