தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தின் 176 இடங்களில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி நடைபெற்று வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டம் 2022ல் துவங்கப்பட்டது. இதன்படி, நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கையை அறிவது, அதன் வாழிடங்களை பாதுகாப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி, முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் முக்கூர்த்தி தேசிய பூங்காவின் வனப்பாதுகாவலர் உத்தரவின்படி, முக்கூர்த்தி தேசிய பூங்காவில் வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. இன்று தொடங்கிய கணக்கெடுப்பு பணி வருகின்ற 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. கணக்கெடுப்பு பணியில் வன ஆய்வக ஆராய்ச்சியாளர்கள், தன்னார்வலர்கள் என 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் பொள்ளாச்சி வனச்சரகம் சுற்றுவட்டார பகுதியில் ஜிபிஎஸ் கருவி மூலம் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு வனத்துறை அதிகாரி, ஒரு வனக்காப்பாளர், வேட்டை தடுப்பு காவலர் என மூன்று பேர் ஈடுபட்டு வருகின்றனர்.  

Night
Day