எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்திற்கு இன்றுமுதல் 8 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறக்கப்படும் என கர்நாடகா அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு காவிரி நீரை திறக்க முடியாது என கர்நாடகா அரசு திட்டவட்டமாக கூறி வந்தது. இதனிடையே கடந்த 12-ம் தேதி டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், "தமிழகத்துக்கு ஜூலை 31-ம் தேதிக்குள் தினமும் 1 டிஎம்சி காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் கர்நாடக பாசன பகுதிகளில் 28 சதவீத தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதாகவும் எனவே தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்க முடியாது எனவும் முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகத்துக்கு இன்றுமுதல் 8 ஆயிரம் கனஅடி காவிரி நீரை திறக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைப்படி தினமும் ஒரு டி.எம்.சி நீரை திறந்து விட முடியாது என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.