தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசுக்கு தமிழக விவசாயிகள் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்திற்கு காவிரி நீரை தர கர்நாடகா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. இன்று முதல் 20 நாட்களுக்கு தினமும் 1 டிஎம்சி வீதம் தமிழகத்துக்‍கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை வழங்கி இருந்தது. ஆனால் காவிரியில் தண்ணீர் திறந்து விட இயலாது என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக கூறியுள்ளார். கர்நாடக பாசன பகுதிகளில் 28 சதவீத 
தண்ணீர் பற்றாக்‍குறையாக இருப்பதாகவும், எனவே தமிழகத்திற்கு காவிரி நீரை தர முடியாது என சித்தராமையா தெரிவித்துள்ளார். இதன் மூலம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவை ஏற்க சித்தராமையா மறுத்துள்ளார். இதனிடையே தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசுக்கு தமிழக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Night
Day