தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வட தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்த வானிலை மையம், வரும் நாட்களில் வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என தெரிவித்துள்ளது.  வடதமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 34 முதல் 39 டிகிரி செல்சியஸ் மற்றும் தென்தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று தமிழக கடலோரப் பகுதிகளான, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30 முதல் 35டிகிரி செல்சியஸ்    பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக  5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தாலும் மற்ற பகுதிகளில் அதிக வெப்பநிலையுடன் வறண்ட வானிலையே நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Night
Day