தமிழகத்தில் ஆண் வாக்காளர்கள் 3.3 கோடி - பெண் வாக்காளர்கள் 3.14 கோடி - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம்  முழுவதும் தற்போது, 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, தமிழகம்  முழுவதும் தற்போது, 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 348, பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 294 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. அதில், 6 லட்சத்து  60 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல், குறைந்த வாக்காளர்களின் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி உள்ளது. இத்தொகுதியில் மொத்தமாக ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதி காலியாக உள்ளது என சட்டப்பேரவையில் செயலகத்தில் இருந்து இன்னும் அறிவிப்பு வரவில்லை  என்றும் அறுவிப்பு வந்ததும் இடை தேர்தலுக்கான பணிகள் தொடங்கும்  என்றும் தெரிவித்தார்.


தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இறுதி வாக்காளர் பட்டியலிலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினர் முன்னிலையில்  மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.  அதன்படி, திருப்பூர் மாவட்டம்  தாராபுரம், காங்கேயம், அவினாசி, பல்லடம் உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டார். அதில் மாவட்டம் முழுவதும் 11 லட்சத்து 50ஆயிரத்து 110ஆண்கள் , 11 லட்சத்து 94ஆயிரத்து 358பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 342 பேர் என மொத்தமாக 23 லட்சத்து 44 ஆயிரத்து 810 பேர் வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Night
Day