தமிழகத்தில் இதுவரை 14,000 பேர் டெங்குவால் பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 7 நபர்கள் உயிரிழந்ததாக மக்‍கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தற்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ்-எஜிப்டி வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களைப் பரப்பி வருகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் நிகழாண்டில் 14 ஆயிரத்து 560 போ் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானதாகவும், அதில் 7 போ் உயிரிழந்ததாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Night
Day