தமிழகத்தில் கனமழை - 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், ஒரு சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, தஞ்சை, கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், சேலம், திருவாரூர்,  ராமநாதபுரம், கரூர்,  தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். இதேபோல் நெல்லையில் 5 வகுப்பு வரையும், திருவண்ணாமலை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day