எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் 6 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 28 பிடிஎஸ் இடங்கள் காலியாக உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரம் தெரிவித்துள்ளது.
2024-25ம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று கலந்தாய்வு முடிந்து சிலா் கல்லூரிகளில் சேரததால் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 6 எம்பிபிஎஸ் இடங்கள் காலியாகி உள்ளன. மேலும் கடலூா் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 4 பிடிஎஸ் இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் 24 பிடிஎஸ் இடங்கள் என 28 இடங்கள் காலியாக உள்ளன. இறுதிச்சுற்று கலந்தாய்வில் பங்கேற்று எம்பிபிஎஸ் படிப்பை தேர்வு செய்த 4 பேர் மற்றும் பிடிஎஸ் படிப்பை தேர்வு செய்த 16 பேர் என 20 பேர் கல்லூரிகளில் சேராததால் அவா்களுக்கு அபராதம் மற்றும் ஓராண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்கு தடை விதித்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.