தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எங்கே - அன்புமணி ராமதாஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு பள்ளியில் ஆசிரியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெட்டப்பட்ட சம்பவத்திற்கு பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள், தற்போது நிகழ்ந்துள்ள இரு சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 6 ஆயிரம் கொலைகளும், 50 ஆயிரம் கொள்ளைகளும் நடந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சருக்கு இதைப்பற்றியெல்லாம் எவ்வித கவலையும் இல்லை எனவும் விமர்சித்தார். திமுக ஆட்சியில் காவல்துறைக்கு பல எஜமானர்கள் இருப்பதகாவும், இதுவே சட்டம் - ஒழுங்கு சீர்குலைவுக்கும் காரணம் எனவும் அன்புமணி ராமதாஸ் சாடியுள்ளார்.

Night
Day