எழுத்தின் அளவு: அ+ அ- அ
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்தார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, விளம்பர திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், திமுகவினரே குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். முதலமைச்சர் ஆமை வேகத்தில் செயல்படுவதாக விமர்சித்துள்ள புரட்சித்தாய் சின்னம்மா, தமிழகத்தில் போதைப் பொருள் தாராளமாக கிடைப்பதாகவும், அதனை தடுக்க விளம்பர திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 2026ல் அம்மாவின் ஆட்சியை அமைப்பதே தங்களின் இலக்கு என புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை போயஸ்கார்டன் ஜெயலலிதா இல்லத்தில், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அனைவருக்கும், 2025ம் ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துகளை அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையடுத்து, புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி நிச்சயம் அமையும் என்று புரட்சித்தாய் சின்னம்மா உறுதிபடத் தெரிவித்தார்.
அஇஅதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெறுவது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'முடிவு வெளியாகும் வரை பொறுத்திருங்கள்' என புரட்சித்தாய் சின்னம்மா பதிலளித்தார்.
அஇஅதிமுக-வின் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு தொடர்பாக முயற்சிகள் நடைபெறுகின்றனவா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'பொறுத்திருந்து பாருங்கள்' என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.