தமிழகத்தில் டிச.17ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்டா மாவட்டங்களில் வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 18ஆம் தேதி சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த 24 மணிநேரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும், இது வலுபெற்று தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி இரு தினங்களில் நகரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 17ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும்,செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18ஆம் தேதி கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை மையம் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது வரும் 19ஆம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர்  ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



Night
Day